பெரியார் தன் குடி வகுப்பு உணர்ச்சி உடையவர் தான்👇
நாயக்கமார்கள் பதவிக்குக் குரல் கொடுத்தார் பெரியார்
சட்டமன்றத் தேர்தலுக்குக் கோவை மாவட்டத்தில் ஆந்திர நாயக்கர் வகுப்பைச் சேர்ந்த ஒருவரைக்கூட வேட்பாளராக நியமிக்காமல் காங்கிரசுக் கட்சி ஏமாற்றிவிட்டது என்று விமர்சிக்கிறார். இதுகுறித்து 15. 11. 1936 நாளிட்ட குடியரசு இதழில் எழுதிய துணைத் தலையங்கத்திற்கு பெரியார் கொடுத்துள்ள தலைப்பு "நாயக்கமார்கள் நாமஞ் சாத்தப்பட்டார்கள்" என்பதாகும்.
"கோயமுத்தூர் ஜில்லாவில் கொங்கு வேளாளர் களுக்கு அடுத்த சமூகம் ஜனப் பெருக்கத்திலும் விவசாயத்திலும் இரண்டாவதாக விளங்கக் கூடியவர்கள் ஆந்திர நாயக்கமார், அதாவது கம்ம நாயக்கர்மார் சமூகமாகும். இவர்கள் செல்வத்திலும் வியாபாரத்திலும் வேளாளர்களைவிட சிறிது குறைந்தவர்கள் அல்ல என்றே சொல்லலாம். பொள்ளாச்சி, உடுமல்பேட்டை, திருப்பூர், அவனாசி ஆகிய தாலுகாக்களில் இவர்கள் குறிப்பிடத்தகுந்த ஜன சமூகமுள்ளவர்கள். இவ்வள வோடு மாத்திரமல்லாமல், காங்கிரஸ் கூப்பாட்டிலும் கதர் வேஷத்திலும் ஜெயிலுக்குப் போனதிலும் அடிபட்டதிலும் பிழைப்பு இருப்பு முதலியவைகளை லட்சியம் செய்யாமல் காங்கிரஸ் என்று அலைந்ததிலும் இவர்கள் மற்ற எந்த சமூகத் தாரையும்விடக் குறைந்தவர்கள் அல்ல என்பது மாத்திரமல்லாமல் வேறு பல சமூகங்களை யெல்லாம் விட மேம்பட்டவர்கள் என்றும் சொல்லலாம்".
"இப்படிப்பட்ட சமூகத்தார் இன்று காங்கிரஸ் பார்லி மெண்டரி கமிட்டியாரால் நாமம் சாத்தப்பட்டு விட்டார்கள். கோயமுத்தூர் ஜில்லாவில் அசம்பளிக்கு உள்ள 8 நாயக்கர்களில் ஸ்தானங்களிலும் யாரையும் ஒன்றுக்குக்கூட நியமிக்காமல் காங்கிரஸ்கார்கள் பட்டை நாமம் சாத்தி விட்டார்கள்."
- குடியரசு 1936 (2)
பெரியாரின் எழுத்தும் பேச்சும் : தொகுதி 23
இதே துணைத் தலையங்கத்தில் சாதி உணர்ச்சி உண்டாவது தேவை என்று எழுதுகிறார்.
"வகுப்பு உணர்ச்சி உண்டாக வேண்டும் என்பதுதான் நமது அபிப்பிராயம். அப்படிப்பட்ட வகுப்பு உணர்ச்சியில் தான் ஒவ்வொரு வகுப்பும் முன்னுக்கு வரமுடியும் என்பதுதான் நமது அபிப்பிராயம்".
"ஆனால் நாயக்கமார்கள் 'தலை எழுத்து' இவ்வளவு தானா என்று கேட்கிறோம்".
'அவனாசி கோயமுத்தூர் தாலுக்காக்களின் ஸ்தானத்தை ஏன் நாயக்கமார்களுக்கு விட்டுவிடக் கூடாதென்று கேட்கின்றோம்".
- மேற்படி துணைத் தலையங்கம்
இது தான் சாதி வேண்டாம் என்னும் பெரியாரியம்(திராவிடம்) போல
நன்றி https://www.instagram.com/p/DSyoesogvuQ/?utm_source=ig_web_copy_link&igsh=NTc4MTIwNjQ2YQ==
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக